Publish Date: Tue, 25 May 2021 (21:55 IST)
Updated Date: Tue, 25 May 2021 (22:00 IST)
இந்த ஆண்டில் (2010) 14 வது ஐபில் சீசனை பிசிசிஐ நடத்தி வந்த நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரொனா இரண்டாவது அலையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் -2021 தொடர் எப்போதும் நடைபெறும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிமுதல் அக்டோபர் 15 ஆம் தேதிவரையிலான 25 நாட்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் செப்டம்பர் 14ல் முடியவுள்ளதால் வீர்ர்களைத் தனிமைப்படுத்திவிட்டு, கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அமீரகத்தில் வீரர்களைப் பாதிகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.