Publish Date: Sat, 31 Oct 2020 (10:26 IST)
Updated Date: Sat, 31 Oct 2020 (10:39 IST)
டி 20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் டி 20 போட்டிகளில் மட்டும் 1000 சிக்சர்களை அடித்து சாதித்துள்ளார்.
உலகெங்கும் நடக்கும் டி 20 கிரிக்கெட் தொடர்கள் அனைத்திலும் விளையாண்டு வருகிறார் யுனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல். அது போல இதுவரை டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு உரியவராக இருக்கிறார். 41 வயதிலும் சிறப்பாக விளையாடும் இவர் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் சேர்த்து 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் தனது 1000 மாவது சிக்சரை அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் கிரிக்கெட் வீரர் கெய்ல் ஆவார்.