ஐபிஎல்- தொடரின் 50 வது லீக் போட்டி அபுதாபியில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவெடுத்தது.
இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர்ன் மந்தீப் சிங் முதல் பந்தில் ஆட்டமிழக்கவெ அடுத்து அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் வந்தார்.
அவர் கே.எஸ்.ராகுலுடன் நிதானமாக விளையாடினார். பின்னர் அதிரடி காட்டி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் 19 ஆவது ஓவரின்போது, அவர் 92 ரன்கள் இருந்தார். அடுத்து ஒரு சிக்ஸர் அடிப்பார் என எதிர்ப்பார்த்தபோது ஆர்சர் வீசிய 3வது பந்தில் சிக்ஸர் அடித்தார். இன்னும் சதத்திற்கு 1 ரன் தேவையென்ற நிலையில், கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
ஒரே ரன்னில் சதத்தை இழந்த விரக்தியில் பேட்டை மைதானத்தில் வீசினார்.இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. கிறிஸ்கெயில் 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அவுட்னார்.
எனவே ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணியில் உத்தப்பா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் 48 ரன்களுக்கு அவுட் ஆனார்.
ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்களும், பட்லர் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.குறிப்பாக 17. 3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே ராஜஸ்தான் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றியுள்ளது.