நேற்றைய ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடிய க்ரிஸ் கெயில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருந்தாலும் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் மோசமான தோல்விகளை கண்டு வந்த கிங்ஸ் லெவன் அணி, யுனிவர்சல் பாஸ் க்ரிஸ் கெயிலின் வருகைக்கு பிறகு தாறுமாறான வெற்றிகளை ஈட்ட தொடங்கியது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர்களை விளாசிய கெயில் ஐபிஎல் வரலாற்றிலேயே 1000 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
99 ரன்கள் அடித்திருந்த நிலையில் சதம் அடிக்க வேண்டிய பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார் கெயில். இது கெயில் ரசிகர்களுக்கு சிறிய அளவில் வருத்தத்தை தந்தாலும் 1001 சிக்ஸர்களை விளாசியதை பெருமையாக கருதுகிறார்கள்
இதுகுறித்து பேசியுள்ள கெயில் “1000 சிக்ஸர்கள் அடித்தது நல்ல ரெக்கார்டாக உள்ளது. 41 வயதிலும் பவர் ஹிட் அடிப்பது நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதேசமயம் நான் சதம் அடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 99 ரன்களின் அவுட் ஆனதில் வருத்தம்தான். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னை பொறுத்த அளவில் அதை சதமாகதான் நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.