மளமளவென விழுந்த சிஎஸ்கே விக்கெட்டுக்கள்: ஐதராபாத்துக்கு 133 இலக்கு!

புதன், 17 ஏப்ரல் 2019 (21:54 IST)
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
 
ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் அடித்திருந்த சென்னை அணி அதன்பின் மளமளவென விக்கெட்டுக்களை இழந்து 16 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராயுடு மற்றும் ஜடேஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி அணியை 132க்கு தள்ளாடி கொண்டு வந்தனர்.
 
ஐதராபாத் அணியை சேர்ந்த ரஷித்கான், ரெய்னா மற்றும் கேதார் ஜாதவ் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அஹ்மது ஒரு விக்கெட்டையும், நீடம் ஒரு விக்கெட்டையும் விஜய் சங்கர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 133 என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இந்த போட்டியில் ஐதராபாத் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி!