Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொபைல் போன் கொண்டு செல்லலாம்: சேப்பாக்கம் நிர்வாகம் இறங்கி வந்தது ஏன்?

Advertiesment
mobil phone
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (14:42 IST)
சென்னையில் இன்று இரவு நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணியின் போட்டியை நேரில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வரலாறு காணாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் அடைந்ததால் இன்றைய போட்டியின்போது கேலரிகள் காலியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள அடுத்த போட்டிகளுக்கு யாரும் டிக்கெட் வாங்க வேண்டாம் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. இதற்கு ஆதரவும் அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அடைந்த சேப்பாக்கம் நிர்வாகம் தற்போது மொபைல் போனை மைதானத்திற்குள் கொண்டு செல்லலாம் என கட்டுப்பாட்டை திடீரென சற்று தளர்த்தியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் மேலும் சில பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
 
என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் நம்ம மக்கள் கண்டிப்பாக இன்றைய போட்டியின்போது ஏதாவது செய்து நம்முடைய காவிரி, ஸ்டெர்லைட் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு அழகிகள் ; கலக்கல் டான்ஸ் : மீண்டும் அண்ணாச்சி - வைரல் வீடியோ