Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொறுமொறுப்பான ராகி மசாலா தோசை செய்வது எப்படி?

Ragi Masala Dosa
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (10:15 IST)
உணவு வகைகளில் ராகி உள்ளிட்ட தானியங்களை கொண்டு செய்யும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று. ராகியை வைத்து சுவையான மசாலா தோசை செய்வது எப்படி என பார்ப்போம்.


  • தேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, கடுகு, உப்பு தேவையான அளவு
  • ராகி மாவையும், அரிசி மாவையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய்விட்டு  கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதை ராகி, அரிசி மாவுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.
  • உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறி தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி ராகி மாவு கலவையை தோசையாக ஊற்றி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை மேலே தடவ வேண்டும்.
  • பின்னர் மடித்து எடுத்தால் சூடான மொறுமொறுப்பான ராகி மசாலா தோசை தயார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீரை இயற்கையான முறையில் சுத்திகரிப்பது எப்படி?