Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூடான சுவையான காளான் குருமா செய்வது எப்படி?

Mushroom
, திங்கள், 20 நவம்பர் 2023 (12:38 IST)
காளான் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பலருக்கும் பிடித்தமானது. சூடான சுவையான காளான் குருமாவை ஈஸியாக செய்வது எப்படி என பார்க்கலாம்.


  • தேவையானவை: காளான், முந்திரி, பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல், ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய்.
  • தேவையானவை: மல்லித்தழை, வெங்காயம், பட்டை, சோம்பு, சீரகம், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
  • முதலில் காளானை நீள வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
  • முந்திரி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துறுவல், ஏலக்காய், கிராம்பு, பட்டை, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக விழுதாக அரைக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்னர் நறுக்கிய காளானை அதில் போட்டு, அரைத்த கலவையை சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • காளான் வெந்து நல்ல கொதி வந்ததும் இறக்கினால் சூடான சுவையான காளான் க்ரேவி தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்சர் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் 5 இயற்கை நிவாரணிகள்!