Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூடான மொறுமொறு கேரட் தோசை செய்வது எப்படி?

Carrot Dosa
, திங்கள், 13 நவம்பர் 2023 (09:25 IST)
தினசரி நாம் சாப்பிடும் டிபன் வகைகளில் சத்தான காய்கறிகளை சேர்த்து செய்வது குழந்தைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். ஊட்டச்சத்துகள் பல கொண்ட கேரட்டை கொண்டு கேரட் தோசை எப்படி செய்வது என பார்க்கலாம்.


 
  • தேவையான பொருட்கள்: இட்லி அரிசி, உளுந்து, கேரட், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
  • அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக 3 மணி நேரம் நன்றாக ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • மையாக அரைத்து இரண்டு மாவையும் கலந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிப்பதற்காக கொஞ்ச நேரம் வைக்க வேண்டும்.
  • கேரட்டை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைக்கும்போது முழுவதும் மாவு போல அரைத்து விடாமல் கேரட் பிசிறாக வரும்படி லைட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதை மாவுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவு பொன் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வழக்கமாக தோசை சுடுவது போல சுட்டெடுக்கலாம்.
  • கேரட் தோசைக்கு தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கும் ஆரோக்கியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகள் குடிக்க சரியான டீ வகைகள்!