Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடுக்காயின் மருத்துவ குணங்கள்...!!

கடுக்காயின் மருத்துவ குணங்கள்...!!
, சனி, 2 அக்டோபர் 2021 (01:20 IST)
நமது நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பயன்படுத்தபட்டு வந்திருக்கிறது கடுக்காய்.
 
இந்த கடுக்காயில் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை  பயன்படுத்தக்கூடாது.
 
தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு, ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை பெரும். மிகுந்த ஆற்றல் உடலில் உண்டாகும்.
 
கடுக்காய் தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.
 
வாதம் மற்றும் பித்த தோஷங்கள் நமது உடலில் அதிகம் ஆகும் போது வாயு கோளாறுகள், வாத வலி, பித்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. 
 
கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.
 
ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிவது நின்ற பிறகு, அந்த காயத்தின் மீது கடுக்காய் பொடியை தூவுவதால் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ஏற்கனவே இருக்கும் புண்களின் மீதும் கடுக்காய் பொடியை தூவி வந்தால் புண்கள் சீக்கிரம் ஆறும்.
 
தலைமுடியில் குறிப்பாக இளம் வயதினர், மற்றும் நடுத்தர வயதினருக்கு பேன், பொடுகு போபண்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. இதனை போக்க தேங்காய்  எண்ணெய்யில் மூன்று கடுக்காய்களை போட்டு காய்ச்சி, அதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன், பொடுகு போன்ற தொல்லைகள் நீங்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள்