Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் தொடங்கி நியூ இயர் வரை Stranger Things திருவிழா! - Final Season ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

Prasanth K
புதன், 16 ஜூலை 2025 (10:10 IST)

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான வெப் சிரிஸான Stranger Things-ன் இறுதி சீசன் வெளியாகும் தேதிகளையும், டீசர் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர்.

 

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி தொடர்களில் Stranger Things முக்கியமான இடத்தில் உள்ளது. 2016ம் ஆண்டில் இதன் முதல் சீசன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இதுவரை 4 சீசன்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 

 

Hellfire Club என்ற பெயரில் இயங்கும் மைக், வில், லூகாஸ், டஸ்டின் என்ற நான்கு சிறுவர்களை மையப்படுத்தி தொடங்கிய இந்த கதை, சூப்பர் பவர் கொண்ட லெவன் என்ற சிறுமி, மேக்ஸ், நான்சி, ஸ்டீவ் என பல கதாப்பாத்திரங்களோடு அடுத்தடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர் அட்வெஞ்சர்களை செய்து வருகிறது. Upside Down என்ற Alternative Realityல் வாழ்ந்து வரும் டெமோக்ராகன் என்ற ஜந்துவை அழிக்கும் இவர்கள் நான்காவது சீசனில் மேக்னா என்ற அசுரனை எதிர்கொண்டார்கள். தற்போது ஹாக்கின்ஸ் நகரம் முழுவதும் மேக்னாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட அதை இந்த சிறுவர் குழுவினர் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதே கடைசி சீசனாக வெளியாக உள்ளது. இந்த 4 சீசன்களும் நெட்ப்ளிக்ஸில் தமிழ் டப்பிங்கிலும் உள்ளன.

ALSO READ: 83 நாடுகளில் 268 மில்லியன் மணி நேரம்..! – ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் படைத்த சாதனை!

பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ள இந்த இறுதி சீசன் மூன்று பகுதிகளாக வெளியாக உள்ளது. அதன்படி, முதல் 4 எபிசோடுகள் நவம்பர் 26ம் தேதி வெளியாகின்றன. பின்னர் 3 எபிசோடுகள் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்றும், கடைசி பகுதி டிசம்பர் 31 அன்றும் வெளியாக உள்ளது. இந்த கடைசி சீசனின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments