Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

Advertiesment
விஜய்

vinoth

, திங்கள், 16 ஜூன் 2025 (13:12 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன.

ஏற்கனவே விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது எஞ்சிய நடிகர்களுக்கான காட்சிகளை ஹெச் வினோத் படமாக்கி வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடையக் காட்சிகள் இன்றோடு நிறைவடைந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?