Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (18:59 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு கூறப்பட்டது. இதற்கான முழு திரைக்கதை அமைக்கும் பணியும் முடிவடைந்து, படப்பிடிப்புக்கு செல்லும் தருவாயில் தான், திடீரென சிவகார்த்திகேயன் 'பராசக்தி' மற்றும் 'மதராஸி' ஆகிய இரண்டு படங்களில் கமிட் ஆனார். இதனால், சிபி சக்கரவர்த்தியின் படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது 'பராசக்தி' மற்றும் 'மதராஸி' ஆகிய இரண்டு படங்களை முடித்தவுடன், சிபி சக்கரவர்த்தி படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், மீண்டும் அவரை அழைத்து சிவகார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதல் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால், நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுகள் மட்டும் முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிடலாம் என்று சிபி சக்கரவர்த்தி தரப்பினர் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷியின் க்யூட் லுக்ஸ்!

கூலி படத்துக்கு என் சம்பளம் ‘லியோ’வை விட இரண்டு மடங்கு… ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

தெளிவானத் திட்டமிடலுடன்தான் படமாக்கினோம்… ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments