பிரியங்கா சோப்ரா தயாரித்து நடிக்கப் போகும் புதிய ஹாலிவுட் படம் இதுதான்!

வியாழன், 31 ஜனவரி 2019 (12:17 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா 'மா ஆனந்த் ஷீலா'வின் வாழ்க்கை வரலாற்று கதையை தழுவி உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். 


 
ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோன்சுடன்  பிரியங்கா சோப்ராவுக்கு ஆடம்பரமாக திருமணம்  நடந்தது. இதனால் பிரியங்கா சோப்ரா இந்தியா ஊடகங்களில் தலைப்பு செய்தியாக காணப்பட்டார். இப்போது பிரியங்கா சோப்ரா தனது இயல்பான பணிகளுக்கு திரும்பி விட்டார் . விரைவில் வரப்போகும் தனது அடுத்த ஹாலிவுட் படமான Isn’t It Romantic' படத்தை ப்ரோமோட் செய்யும் வேலையில் பிஸியாகி விட்டார்.  இந்நிலையில் மறைந்த ஆன்மீக தலைவரான ஓஷோவின் வலதுகரமாக இருந்த  மா ஆனந்த் ஷீலாவின் வாழ்க்கையை தழுவி  புதிய ஹாலிவுட் படம் உருவாக உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் பேரி லிவின்சன் இயக்க போகிறார்.  இந்த படத்தை தயாரித்து நடிக்கப்போவது பிரியங்கா சோப்ராதான். இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா சோப்ரா தெரிவித்தார். 
 
இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா  சோனாலி போஸ் இயக்கும் தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஃபரக்த் அக்தர் , ஜெய்ரா வாஷிம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.  தன்னம்பிக்கை பேச்சாளர் ஆய்ஷா சௌத்ரியை வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆர்யா உள்ளே… – முடியாத இந்தியன் 2 நடிகர் தேர்வு !