Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிக் ஜோனசை பிரியங்கா கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக புகார் கிளப்பிய பிரபல இணையதளம்!

Advertiesment
நிக் ஜோனசை பிரியங்கா கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக புகார் கிளப்பிய பிரபல இணையதளம்!
, சனி, 8 டிசம்பர் 2018 (10:38 IST)
36 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட  10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர்  நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது. இந்நிலையில்  அமெரிக்காவில் உள்ள பிரபலமான இணையதளம், பிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறாக செய்தி பரப்பியது.


 
அதில், பிரியங்கா சோப்ராவை  ஒரு ஏமாற்றுக்காரர் என்றும்,  நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.  முலும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான காதல் உண்மையானது இல்லை என்றும், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பலர் அந்த இணையதளத்தை கடுமையாக கண்டித்தனர். இதனால் எதிர்ப்பகளுக்கு பயந்து அந்த கட்டுரையை அமெரிக்க இணையதளம் நீக்கிவிட்டது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் தொழிலாளி என திட்டிய மேனேஜர்: நடிகை ஷரின் போலீசில் புகார்