Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

Advertiesment
நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு
, புதன், 8 ஜூலை 2020 (17:40 IST)
நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
2020 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது
 
இந்த நிலையில் நீட் தேர்வை செப்டம்பர் 13 ஆம் தேதியும் ஜே.ஈ.ஈ. தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதியும் நடத்தப்படும் என மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்தார்.
இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ. மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டது 
 
இதன்படி தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கும் உடல் நிலை சான்றிதழ் அவசியம் என்றும், தேர்வு மைய சுவர்கள், கதவுகள், வாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்றும், புதிய முக கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...