Publish Date: Fri, 06 Aug 2021 (07:30 IST)
Updated Date: Fri, 06 Aug 2021 (07:30 IST)
எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கு மாணவர் சேர்க்கை: தேதி அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
ஏற்கனவே மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதும் அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகள் நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10 முதல் தொடங்கும் என்று தொழில் நுட்ப கல்வியாக மாறி இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை படிப்பிற்கு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆன்லைன் மூலமே சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
siva
Publish Date: Fri, 06 Aug 2021 (07:30 IST)
Updated Date: Fri, 06 Aug 2021 (07:30 IST)