Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்பர் ஹெர்டை அடிச்சு விரட்டுங்க.. ஜானி டெப்க்கு நீதி குடுங்க! – இந்தியாவிலும் ஒலிக்கும் ஹாலிவுட் குரல்!

ஆம்பர் ஹெர்டை அடிச்சு விரட்டுங்க.. ஜானி டெப்க்கு நீதி குடுங்க! – இந்தியாவிலும் ஒலிக்கும் ஹாலிவுட் குரல்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (11:30 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்-ஐ வார்னர் ப்ரோஸ் படங்களிலிருந்து நீக்கியதற்கு எதிராக உலக ஹாலிவுட் ரசிகர்கள் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட் சினிமாவில் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பேரோவாக நடித்து உலகளவில் ரசிகர்களை ஈட்டி பிரபலமானவர் ஜானி டெப். சமீபத்தில் நடிகர் ஜானி டெப்புக்கும் அவரது மனைவியும் பிரபலமான ஹாலிவுட் நடிகையுமான ஆம்பர் ஹெர்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் தொடுத்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தால் ஜானி டெப்பை தனது பென்டாஸ்டிக் பீஸ்ட் படத்திலிருந்து வார்னட் ப்ரோஸ் நிறுவனம் நீக்கியது. பெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தில் பிரபல வில்லனான க்ரிண்டல்வால்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜானி டெப்.

ஆனால் ஆம்பர் ஹெர்ட் அவர் நடித்து வரும் அதே வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் டிசி பட வரிசையான அக்குவாமேனில் தொடர்ந்து நடிக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜானி டெப்புக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பேசி வரும் அவர் ரசிகர்கள் ஆம்பர் ஹெர்டை வெளியேற்றவும், ஜானி டெப்பை மீண்டும் க்ரிண்டல்வால்ட் பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் கோரிக்கை விடுத்து #JusticeForJohnnyDepp என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஜானி டெப்புக்கு இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் இந்திய அளவிலும் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெடி 2 எல்லாம் இல்லங்க…. ஆர்யா நெக்ஸ்ட் அப்டேட்!