ஹாலிவுட்டில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் டாம் க்ரூஸ். தொடக்கத்தில் அனைத்து விதமானப் படங்களிலும் நடித்து வந்த டாம் க்ரூஸ் தற்போது ஆக்ஷன் படங்களில் மட்டும் அதிகளவில் நடித்து வருகிறார்.
தற்போது 64 வயதாகும் டாம் க்ரூஸ், ஹாலிவுட்டின் லேட்ட்ஸ்ட் சென்சேஷன் நடிகையான அனா டி அர்மாஸை ஒன்பது மாதங்கள் டேட் செய்தார். ஆனால் அவர்கள் காதல் கல்யாணம் வரை சென்று முறிந்தது. டாம் க்ரூஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனா டி ஆர்மாஸ் உடனானக் காதல் முறிந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே டாம் க்ரூஸ் ஹாலிவுட்டின் மற்றொரு இளம் நடிகையான சிட்னி ஸ்வீனியை டேட் செய்யத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் ஒன்றாக சிரித்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இந்த செய்திக்குத் தூபம் போட்டுள்ளது.