Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை… பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்!

Advertiesment
கொரோனா

vinoth

, செவ்வாய், 21 அக்டோபர் 2025 (10:16 IST)
பாலிவுட் நடிகரான வித்யுத் ஜமால் தனது கட்டுக்கோப்பான உடலாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் களரிபயட்டு எனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்து வருகிறார்.  தமிழில் இவர் பில்லா 2, துப்பாக்கி மற்றும் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிந்த நடிகராக உள்ளார்.

அதன் பின்னர் சில படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் அவர் வில்லன் வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். அதில் “அஜித் சாருடன் இணைந்து பில்லா 2 படத்தில் நடித்தேன். நான் பெரிய நடிகராக ஆவதற்கு முன்பே அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். அவருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘அரசன்’ ப்ரோமோவைக் கொண்டாடித் தள்ளிய ரசிகர்கள்… 20 மில்லியன் பார்வைகள்!