Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் ; மும்பையில் வீடு வாங்கிய விஜய் பட ஹீரோயின் !

Shooting
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (17:34 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மும்பையில் வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

  தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர், கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதன்பின்னர், இவர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு  நல்ல பெயர் பெற்றுத் தந்தது.

இவர் கார்த்தி நடிப்பில் வெளியான  சுல்தான் படத்தின் வெற்றிப் பின் தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்குகிறார்.

இந்த நிலையில், தமிழ், தெலுங்குப்படத்தைத் தொடர்ந்து இந்தியில், சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன்  மிஷன் மஜ்னு  போன்ற படங்களுடன்  பிரபல ஓடிடியில் வெப் சீரிஸும் நடித்து வருகிறார்.

இதுவரை இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பைக்குச் சென்று  ஹோட்டலில் தங்கி வந்த அவர்,  தற்போது மும்பையில் உள்ள  முக்கிய பகுதியில் பிரமாண்ட வீடு வாங்கியுள்ளார்.
webdunia

இந்த வீட்டின் மதிப்பு  8 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அஜித்61'' படத்தின் தலைப்பு இதுதான்! நாளை போஸ்டர் ரிலீஸ்?