கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சியை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் விருமன்
இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கல் பார்த்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் விருமன் படத்தை பார்த்துள்ளார்
அவர் காரில் இருந்து இறங்கும் போதும் படம் பார்க்கும்போதும் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.