கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது என்பதும் வெளி மாநில வாகனங்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டது என்பது தெரிந்தது
இந்த நிலையில் தற்போது படிப்படியாக காற்றின் தரம் மேம்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்றின் மாசு 405 ஆக இருந்த நிலையில் தற்போது 319 ஆக குறைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது நாளை முதல் டெல்லியில் பள்ளிகள் இயங்கும்.
மேலும் வெளி மாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிமாநில வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து அவசர கால நடவடிக்கைகளையும் திரும்ப பெறுமாறு டெல்லி அரசை தேசிய காற்று தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது