Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த்ரிஷாவ தப்பா பேசுறவனா நான்? உண்மையா என்ன சொன்னேன் தெரியுமா? – மன்சூர் அலிகான் விளக்கம்!

Advertiesment
த்ரிஷாவ தப்பா பேசுறவனா நான்? உண்மையா என்ன சொன்னேன் தெரியுமா? – மன்சூர் அலிகான் விளக்கம்!
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (10:13 IST)
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து தற்போது மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள மன்சூர் அலிகான் “'அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான்‌ தப்பா பேசிட்டேன்னு என்‌ பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என்‌ படம்‌ ரிலீஸ்‌ ஆகுற நேரத்துல. நான்‌ வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான்‌ சொல்லிருப்பேன்‌. அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர்‌ கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள்‌ மாதிரி கதாநாயகிகள்‌ கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன்‌. அத கட்‌ பண்ணி போட்டு கலகம்‌ பண்ண நெனச்சா நான்‌ என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம்‌ MLA, MP, மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள்‌ பெரிய தொழில்‌ அதிபர்கள கட்டிட்டு செட்டில்‌ ஆகிட்டாங்க. மேலும்‌. லியோ பூஜையிலேயே என்‌ பொண்ணு தில்‌ ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு சொன்னேன்‌. இன்னும்‌ 2 பொண்ணுகளுக்கு கல்யாணம்‌ பண்ணனும்‌ 360 படங்கள்ல நடிச்சிட்டேன்‌. நான்‌ எப்பவும்‌ சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன்‌ எல்லாருக்கும்‌ தெரியும்‌ சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம்‌ என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட்‌ பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா... நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதீப் என்னை மன்னித்துவிடுங்கள்: பிக்பாஸ் ஐஷு உருக்கமான பதிவு..!