Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை...!

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை...!
வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தான். வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு மார்ச் 8 மற்றும் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
 
வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகையை மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடங்களில்  ஈடுபடுவது வழக்கத்தில் உள்ளது. ஹோலிப்பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று. இதன் கொண்டாட்டங்கள் சாதி, மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒன்றாக இருக்கின்றன.
 
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, பகவான் கிருஷ்ணரின் வாழக்கையோடு தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம் போன்ற ஊர்களில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
 
ஹோலிப் பண்டிகையின்போது இருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைப் பூசிக்கொண்டும். நீர்த் துப்பாக்கிகளில் வர்ணப் பொடி கலந்த நீரைப் பீய்ச்சியடித்தும்  தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்வர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் உள்ள பல வியாதிகளையும் தீர்க்கும் ஒரே பொருள் சுக்கு; எப்படி...?