திருப்பதியில் தொடங்கியது வசந்த உற்சவ விழா.. குவிந்தது பக்தர்கள் கூட்டம்..!

Mahendran
வியாழன், 10 ஏப்ரல் 2025 (18:57 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழா கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
 
காலை 6.30 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மாடவீதிகளில் எழுந்தருளி, வீதியுலா நடந்தது. நாளை, வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளில், தங்கத்தேரில் எழுந்தருளும் சிறப்பு நிகழ்வாகத் தங்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சேர்ந்து திருமலையப்பன் எழுந்தருளவுள்ளார்.
 
இந்த வைபவத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பல்வேறு அர்ச்சனை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. தொடர்ச்சியான விடுமுறையின் காரணமாக கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
 
நேற்றைய தினம் மட்டும் 62,076 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 23,699 பேர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்கியுள்ளனர். உண்டியலில் ரூ.3.21 கோடி காணிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments