Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன்! மகரஜோதியை காண குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

Advertiesment
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன்! மகரஜோதியை காண குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

Prasanth Karthick

, திங்கள், 15 ஜனவரி 2024 (09:17 IST)
இன்று சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர்.



சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதுமுதலாக ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு நடந்தே சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்ஐயப்பன் கோவிலில் சிகர நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

இன்று அதிகாலை 2.46 மணிக்கே நடை திறக்கப்பட்டு மகர சங்ரம சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானம் கொண்டு வரப்படும் திருவாபரணத்தை அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவார்கள்.

அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வரிவில் 3 முறை காட்சி அளிப்பார். அதை காண ஏராளமான பக்தர்கள் இன்று சபரிமலையின் பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்! – இன்றைய ராசி பலன்கள்(15.01.2024)!