Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்க சிறப்பான திருத்தலங்கள்!

சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்க சிறப்பான திருத்தலங்கள்!
, புதன், 15 நவம்பர் 2023 (09:50 IST)
கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் சபரிமலைவாசன் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ள பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.



சபரிமலையில் குடிகொண்டுள்ள ஹரிஹரசுதன் சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் கார்த்திகை முதல் நாள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. இதனால் கார்த்திகை முதல் நாளே சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்க பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

பொதுவாக ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டலம், அதாவது 41 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் மண்டல பூஜை தரிசனத்தை திட்டமிட்டு செல்பவர்கள் சக நாட்களிலும், மகர விளக்கு தரிசனத்தை திட்டமிட்டு செல்பவர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி யாத்திரை செல்வது வழக்கம்.

webdunia


கார்த்திகை முதல் நாளில் சபரிமலை நடை திறக்கும்போதே விரதம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது. சுவாமி ஐயப்பனுக்கு விரதத்தை பலரும் அருகில் உள்ள ஸ்தலங்களில் இருந்து தொடங்குவர். ஐயப்ப விரதத்தை மேற்கொள்ள கன்னியாக்குமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில், பூதபாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில், பார்வதிபுரம் சுவாமி ஐயப்பன் திருக்கோவில், குமாரகோவில் வேளிம்லை சுப்ரமணியஸ்வாமி திருக்கோவில், நாகர்கோவில் நாகராஜ சுவாமி திருக்கோவில் ஆகியவை பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் ஆகும்.

ஐயப்ப பக்தர்கள் பலரும் கார்த்திகை முதல் நாளில் குமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் நீராடி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் திருக்கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் துளசி மாலை அணிந்தி விரதத்தை தொடங்குகிறார்கள்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்ற பாதை! – இன்றைய ராசி பலன்கள்(15-11-2023)!