நாளை மறுநாள் தை அமாவாசை என்ற நிலையில், அன்றைய தினம் ஏராளமான முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில், தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்கான நல்ல நேரம் எது என்பதை தற்போது பார்ப்போம்.
ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை அன்று அமாவாசை திதி வரும் நிலையில், அன்றைய தினம் சூரியன் உதயமாகும் நேரத்தில் திதி வருவதால், அப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி காலை முதல் இரவு வரை அமாவாசை இருப்பதால், அன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி, பண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆசி பெறலாம். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று நாட்களில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதில் தை அமாவாசை தான் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று, எள், தண்ணீர் இறைத்து முன்னோர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு செய்தால், அவர்கள் செய்த பாவங்கள் மீது நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.