Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பமேளா சமயத்தில் வரும் மவுனி அமாவாசை.. 150 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்..!

Advertiesment
railway

Siva

, வியாழன், 23 ஜனவரி 2025 (08:07 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்புடன் நடந்து வரும் நிலையில், கும்பமேளா சமயத்தில் வரும் மவுனி அமாவாசையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவின் போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 9 கோடிக்கு அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக கூறப்படும் நிலையில், வரும் 29ஆம் தேதி முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை தினத்தில் மட்டும் 10 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் 150 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, பக்தர்கள் தங்கும் ஏற்பாடுகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..