புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீசெளந்தரநாயகி சமேத ஸ்ரீசோழீசுவரர் ஆலயம், அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீகாலபைரவரின் சக்தி காரணமாக, பக்தர்களால் 'ஸ்ரீகாலபைரவர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள பைரவரை வழிபட்டால், பக்தர்களின் குடும்ப கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் நலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில், பைரவர் உச்சாடனத்திற்கு பெயர் பெற்றது. இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் அபிஷேகம், மகாதீபம், அன்னதானம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மேலும், மழைக்காக நடத்தப்படும் மஞ்சுவிரட்டின்போது, இக்கோயில் காளை குளத்தில் கரையேறும் இடத்தை பொறுத்தே குளம் நிரம்புவது இங்குள்ள காலபைரவரின் சக்தியை உணர்த்துகிறது.