குழந்தை தேவையில்லாதவர்கள் குற்றால நங்கையம்மன் கோயிலுக்கு சென்றால் உடனே குழந்தை பிறக்கும் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவ தலங்களில் ஒன்று குற்றாலநாதர் கோவில் என்பதும் தென்காசி அடுத்து உள்ள குற்றாலத்தில் இருக்கும் இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் திருக்குற்றாலநாதர், அம்பாள் ஆகியோர் உள்ள நிலையில் உற்சவம் மூர்த்தியாக திருநாமம் சோமாஸ் ஸ்கந்தர் உள்ளார். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது என்பதும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலுக்கு குற்றால நங்கை கோயில் என்று பெயரும் உண்டு. இந்த கோயிலில் வந்து குழந்தை இல்லாதவர்கள் வழிபட்டால் உடனே குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு புட்டு படைத்து, அப்பம் வடை சுண்டல் தேன் திராட்சை ஆகிய பதார்த்தங்களை படைத்து வழங்கினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது என்று அந்த பகுதியில் உள்ள ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.