தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

Mahendran
புதன், 12 நவம்பர் 2025 (17:41 IST)
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
 
பல லட்சம் ரூபாய் செலவில் கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவடைந்த பின்னர், புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பாடு நிகழ்ந்தது.
 
பட்டாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று பக்தி முழக்கமிட்டபடி கோபுர தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

திருநீறு சாம்பலில் உதித்தவர் கோரக்கர் சித்தர்! கோடி புண்ணியம்..!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (04.11.2025)!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நிறைவு: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments