தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஏழு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை 10 மணி வரை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.