தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட வருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பொங்கல் விழா கொண்டாடப்பபடுகிறது. மாட்டுப் பொங்கலின் போது உழவர்கள் தாங்கள் வளருக்கும்ம் மாடுகளுக்கு வண்ணம் பூசி அழகு பார்ப்பதோடு, அதற்கு சுவையான உணவுகளை வழங்குவார்கள். ஒருபக்கம் பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடக்கும்.
நாளை தை முதல் நாள் என்பதால் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று காலை சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் சூரிய பொங்கலை கொண்டாடுவார்கள். அதாவது சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என இரண்டு பொங்கலை வைத்து சிலர் வழிபடுவார்கள். சிலர் அதோடு சில காய்கறிகளையும் சேர்த்து படையல் இடுவார்கள்.
இந்நிலையில், நாளை தைப்பொங்கல் வைக்க எது நல்ல நேரம் என தெரிந்து கொள்வோம். சூரிய பொங்கலை பொறுத்தவரை சூரிய உதயமாவதற்கு முன்பே அதாவது காலை 6 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட வேண்டும். அப்படி முடியாதவர்கள் காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையும் காலை 10.35 மணி முதல் பகல் ஒரு மணி வரையும் சூரிய பகவானை கும்பிடலாம்.