சிதம்பரம் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூரத் தேரோட்டம் கோலாகலம்

Mahendran
வெள்ளி, 14 நவம்பர் 2025 (18:15 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்,  பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
 
நவம்பர் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், நேற்று காலை 8 மணியளவில், அம்மன் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்பாள் புதிய தேரில் எழுந்தருளினார். சுமார் 21 அடி உயரம் கொண்ட இந்த புதிய தேர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது. 
 
வெள்ளோட்டத்துக்கு பிறகு, புதிய தேரில் அம்மன் நான்கு வீதிகளிலும் பவனி வந்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர்.
 
தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று  பட்டு வாங்கும் உற்சவம் நடந்தது. நாளை தபசு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

திருநீறு சாம்பலில் உதித்தவர் கோரக்கர் சித்தர்! கோடி புண்ணியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments