Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை! - பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர்!

Advertiesment
Adiyogi
, திங்கள், 23 டிசம்பர் 2024 (13:33 IST)

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.

 

 

இதையொட்டி, கோவை ஆதியோகி முன்பு நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.

 

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில் இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.

 

இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் அவர்கள் நிகழ்வில் பேசுகையில், “மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோக மையத்தையே சாரும்.

 

ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.  இவ்விழாவில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ரதங்கள் இங்கிருந்து புறப்பட்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள்தோறும் பயணிக்க உள்ளன.

 

கோவில்களில் மூலவர் இருப்பதை போல் ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள் உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர். அதன் நல்ல தொடக்க விழா இன்று தொடங்குகிறது.

 

ஈஷா மையத்தின் பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

 

இதற்கு முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம்a!– இன்றைய ராசி பலன்கள்(23.12.2024)!