Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணம் செய்து கொண்ட ஆதீனம்? விதிமுறைகள் படி சரியா? - ஆதீனம் தந்த விளக்கம்!

adheenam Mahalinga swami

Prasanth Karthick

, வியாழன், 7 நவம்பர் 2024 (10:39 IST)

கும்பகோணம் சூரியனார் கோவில் மடத்தின் ஆதீனம் சமீபத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

கும்பகோணத்தில் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோவில் புகழ்பெற்ற நவக்கிரக பரிகார ஸ்தலமாக உள்ளது. சூரியனார் கோவிலில் உள்ள சைவ மடம் பழமையான சைவ மடங்களில் ஒன்று. அதன் 28வது ஆதீனமாக இருந்து வருபவர் மகாலிங்க சுவாமிகள்.

 

மகாலிங்க சுவாமிகள் சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆதீனம் திருமணம் செய்து கொள்வது சரியா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகளுக்கு சூரியனார் கோவில் மட ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார்.
 

 

அதில் அவர் “நான் ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டது உண்மைதான். கர்நாடகாவில் சைவ மடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டபோது தனக்கு சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ வழங்கினார். மடம் அமைப்பதற்கான பணிகள் அங்கு நடந்து வருகிறது.

 

அங்கு கட்டப்படும் மடத்தின் ட்ரஸ்டியாக ஹேமாஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான் அவரை பதிவு திருமணம் செய்துக் கொண்டேன். ஆதீனத்த்தின் பூஜைகள், நிர்வாகம் வழக்கம் போல் நடக்கும். ஹேமாஸ்ரீ பக்தராக மட்டுமே வந்து செல்வார். சூரியனார் கோவில் முன்னாள் மடாதிபதியாக இருந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பதால் இதில் சர்ச்சைகள் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டம் தொடரும்.. தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன்: கமலா ஹாரீஸ்..