Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி அமாவாசை: ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (18:45 IST)
ஆடி அமாவாசையை முன்னிட்டு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு, தீர்த்தமலை, மற்றும் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பாவங்கள் நீங்க வேண்டி ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
 
ஒகேனக்கல் காவிரிக்கரையில் அதிகாலையிலிருந்தே மக்கள் குவிய தொடங்கினர். வாழை இலை, அரிசி, தேங்காய் போன்ற பொருட்களுடன் பூஜை செய்து, முன்னோர்களை வழிபட்ட பின் அவற்றை ஆற்றில் விட்டனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ராமர், கவுரி உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
 
தென்பெண்ணை ஆற்றுக்கரையில்முன்னோர்களுக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் லட்சக்கணக்கானோர் இந்த வழிபாடுகளில் பங்கேற்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்! இன்றைய ராசி பலன்கள் (21.07.2025)!

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரும்! இன்றைய ராசி பலன்கள் (20.07.2025)!

நாளை ஆடி கிருத்திகை: முருகனைப் போற்றி வரங்கள் அருளும் புண்ணிய நாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments