ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம், பக்திக்கு உகந்த மாதம் என்றே கூறலாம். பூமாதேவி அவதரித்த உன்னதமான மாதம் இது. அதனால்தான் ஆடி மாதம் அம்மனுக்குப் பிரியமானதாகவும், பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம், நாளை மறுநாள் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நீடிக்கிறது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்கள், எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஜூலை 24 - ஆடி அமாவாசை
ஜூலை 28 - ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
ஜூலை 29 - கருட பஞ்சமி, நாக பஞ்சமி
ஆகஸ்ட் 03 - ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 07 - ஆடித்தபசு
ஆகஸ்ட் 08 - வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 09 - ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 10 - காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 12 - மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 16 - கோகுலாஷ்டமி
ஆடி மாத விரத நாட்கள்:
ஜூலை 20 - கிருத்திகை
ஜூலை 21 - ஏகாதசி
ஜூலை 22 - பிரதோஷம்
ஜூலை 23 - சிவராத்திரி
ஜூலை 24 - அமாவாசை
ஜூலை 28 - சதுர்த்தி
ஜூலை 30 - சஷ்டி
ஆகஸ்ட் 05 - ஏகாதசி
ஆகஸ்ட் 06 - பிரதோஷம்
ஆகஸ்ட் 08 - திருவோணம், பௌர்ணமி
ஆகஸ்ட் 12 - சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 14 - சஷ்டி
ஆகஸ்ட் 16 - கிருத்திகை
ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:
அஷ்டமி: ஜூலை 17, ஆகஸ்ட் 01, ஆகஸ்ட் 16
நவமி: ஜூலை 18, ஆகஸ்ட் 02
கரி நாட்கள்: ஜூலை 18, ஜூலை 26, ஆகஸ்ட் 05
வாஸ்து நாள் மற்றும் சிறப்பு அம்சங்கள்:
ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள் ஆகும். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07:44 முதல் மாலை 05:20 வரை.
2025 ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு நாம் இரண்டு ஆடி கிருத்திகைகளைக் கொண்டாட இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.