சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த சார்பு ஆய்வாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன என்பதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை மற்றும் காவல்துறையினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு திருப்பூர் மாவட்ட சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் வருகை தந்திருந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறி கொண்டிருந்தபோது பசுகிடை என்ற பகுதிக்கு வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பாலசுப்ரமணியம் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.