Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளியல் நீரில் பால் சேர்த்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா....?

குளியல் நீரில் பால் சேர்த்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா....?
குளிப்பது உடலை சுத்தப்படுத்த மட்டுமல்ல, உடல் புத்துணர்ச்சி பெறவும் மிகவும் இன்றியமையாதது.குறிப்பாக அன்றாடக் குளியல், பலவித நோய்களை விரட்டுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்துக்கொடுக்கும்.

பாலால் குளிப்பதன் மூலம் சரும நோய்கள், சரும பிரச்னைகளுக்குக் குட்பை சொல்வதுடன், சருமப் பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் அனைத்து மிச்சமாகும். அதற்காக லிட்டர் கணக்கில் பாலில் குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு பக்கெட் குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் சேர்த்தால் போதும். இதனால் பார்லருக்கு செய்யும் செலவுகள், சரும பிரச்சனைகளுக்காக செய்யும் மருத்துவச் செலவுகள் அனைத்தும் மிச்சமாகும்.
 
குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் அல்லது பால் பவுடரை கலக்க வேண்டும். இதற்காக, சாதாரண பால் மட்டுமல்லாது, தேங்காய் பால், ஆடு பால், சோயா பால் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
 
பாலில் இருக்கும் புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்த்திற்கு ஈரப்பதம் அளித்து இறந்த செல்களை நீக்க உதவுகின்றன. பால் குளியல், தோல் அரிப்பு, தோலழற்சி போன்ற தோல் நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
 
குளியல் நீரில் பால் சேர்ப்பது சொரியாசிஸ் அறிகுறிகளைக் குறைக்கும். இந்த அறிகுறிகளில் அரிப்பு, தோல் வெடிப்பு போன்றவை அடங்கும். தோல் அரிப்பு, தோல் சிவத்தல் அல்லது வீக்கத்தினால் அவதிப் பட்டால், பால் குளியல் மூலம் நிவாரணம் கிடைக்கும். பாலில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் புத்துணர்வு பெற உதவும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள ஓமம் !!