Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரும துளைகளை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரி செய்யலாம்....?

சரும துளைகளை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரி செய்யலாம்....?
சிலருடைய சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும்.
 
முதலில் பழுத்த பப்பாளி துண்டுகளை நன்றாக மசித்து கொள்ளுங்கள். அரை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது சருமத்தை சுத்தம் செய்கிறது. திறந்த துளைகளை சுத்தம் சரும பிரச்சனைகளை அடியோடு போக்க உதவுகிறது.
 
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு அப்ளே செய்யும் போது அது சருமத்தை இறுகச் செய்கிறது. இது திறந்த சரும துளைகளை மூட உதவி செய்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவையும் ஓட்ஸ்யையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள்.பிறகு நன்றாக உலர விடுங்கள். பிறகு அதை நன் தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது உங்க முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பிசுக்கை நீக்கி திறந்த சரும துளைகளையும் சுத்தம் செய்கிறது
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த ஜெல்லை உங்க முகத்தில் அப்ளே செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவிக் கொள்ளுங்கள். திறந்த சரும துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்கு போன்றவை எளிதில் நீக்கப்பட்டு சுத்தமாகி விடும். இதை நீங்கள் தினமும் முயற்சி செய்து வரலாம்.
 
ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் கட்டிக் கொள்ளுங்கள். இந்த ஐஸ் கட்டிகளை சில நிமிடங்கள் திறந்த துளைகள் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்கள். இந்த ஒத்தடம் திறந்த துளைகளை மூட உதவி செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!