Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி...?

Advertiesment
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி...?
கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். தரமான மூலிகைகளை பயன்படுத்தி வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம்.

ஹேர் ஆயில் தயாரிப்பு:
 
தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 
 
50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும். இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்
 
எண்ணெய்யில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ள அருகம்புல் !!