தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.
சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.
பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.