Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியான குடல் இயக்கத்திற்கு உதவும் ஆமணக்கு எண்ணெய் !!

Advertiesment
Castor Oil
, வெள்ளி, 24 ஜூன் 2022 (17:29 IST)
ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இது வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, சிறு குடலில் ​​ரிசினோலிக் அமிலம் வெளியிடப்படுகிறது.


பின்னர் இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படத் தொடங்குகிறது. ஆமணக்கு எண்ணெய் வெப்பத்தை உருவாக்கி செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. மற்றும் சரியான குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் பழங்காலத்திலிருந்தே ஆமணக்கு எண்ணெய் கீல்வாதம் வலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய்யில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது மசாஜ் செய்வதற்கு சிறந்ததாக உள்ளது.

நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய்யில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்தவும் உதவுகிறது.

விளக்கெண்ணெய் முகப் பருவுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த இயற்கையான மருந்தாக விளங்குகிறது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, நுண்துளைகளை அடைக்கக்கூடிய பாக்டீரியாக்களை அளிக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாக்குகிறது.

கடுக்காய்ப் பொடியுடன் சிறிது ஆமாணக்கு எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணம், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் புழுக்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் ப்ராக்கோலி !!