Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல மருத்துவ குணங்களும் நன்மைகளும் நிறைந்து காணப்படும் ஆமணக்கு எண்ணெய் !!

Advertiesment
Castor oil
, செவ்வாய், 14 ஜூன் 2022 (17:48 IST)
முகப்பரு முதல் உடல்சூடு வரை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெய்யில் பல மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளன.


பலரும் சிறுவயதிலேயே முதிர்ச்சியான தோற்றமடைந்து காணப்படுவதை பார்த்திருப்போம். காரணம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவை. ஆமணக்கு எண்ணெய் உங்கள் சருமத்தை காய விடாமல் ஈரப்பதம் தக்க வைக்கும் வளையம் போல செயல்படுகிறது. இதனால் சுருக்கங்கள் மற்றும் பிற வயதான தோற்றங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

கண்களை சுற்றி ஏற்படும் வீக்கம் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் அலர்ஜி எதிர்ப்பு திறன் உள்ளதால் முகத்தை ஈரப்பதமாக வைத்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. உறங்கப் போவதற்கு முன்பாக கண்களுக்கு கீழ் எண்ணெய்யை தடவி ஒருவாரத்திற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறவும் ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது. இதை குடிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. தலையின் மேற்பரப்பில் ஏற்படும் தொற்று நோய்களை சரி செய்வதிலும் ஆமணக்கு உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய் அடர்த்தி அதிகமான எண்ணெய். ஆதலால் பிற சாதாரண எண்ணெய்கள் போல நேரடியாக உடலில் பயன்படுத்தக்கூடாது. தேங்காய், பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அழகு மற்றும் உடல்நல தேவைகளுக்கு அதிக பயனை தருகிறது. முடி உதிர்வு மற்றும் பெரும்பான்மையான தோல் பிரச்சினைகளிலிருந்து நிம்மதியைத் தருகிறது. ஆனால் ஏற்கனவே தோல் அலர்ஜி போன்ற பிற வியாதிகள் கொண்டவர்கள் ஆமணக்கு எண்ணெய்யை தவிர்த்தல் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள இஞ்சி !!