வீட்டில் இருக்கும் தேய்க்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை தேய்த்துக் கொண்டால் சருமத்துக்கு வழவழப்பு தன்மை கிடைக்கும்.
காலையில் குளிக்கும் முன் ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்து மசாஜ் செய்தால் சருமம் ஈர தன்மையை இழக்காது. காலையில் நேரம் இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன் கைகளில் தேய்த்து தூங்கலாம்.
ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, அதில் விட்டமின் இ ஆயிலை கலந்து அந்தக் கலவையை கைகளில் பூசி 10 நிமிடம் கழித்து மசாஜ் செய்து பின் துடைத்திட கைகள் மிருதுவாகும்.
சமையல் செய்யும்போது காட்டன் கிளவுஸ் அணிந்துகொண்டால், கைகள் வறண்டு சொர சொரப்பாகாமல் இருக்கும். கெமிக்கல் அதிகம் கொண்ட சோப், பவுடரை உபயோகிக்காமல் இருக்க, கைகள் சாஃப்ட்டாக இருக்கும். பாத்திரம் கழுவும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.
கருப்பான கை மூட்டுகளின் மீது எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து மென்மையாக தேய்த்து பின் கழுவி வர கருமை மாறும். பாத்திரம் அல்லது துணிகளை கைகளால் துவைத்த பிறகு தேங்காய் எண்ணெய்யையோ அல்லது மாய்சரைசிங் கிரீமை தடவினால், கைகள் சொரசொரப்பாகாது.
தேங்காய் எண்ணெய்யில் சிறிது உப்பு கலந்து கைகளில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் கைகள் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் இருக்க உதவும்.