சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும். சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன.
சுரைக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. காமாலை நோய்க்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
சுரைக்காய் சாப்பிட்டால் நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு, அது உடலையும் வலுப்படுத்தும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயைச் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் சுரைக்காய் உதவுகிறது.
கடும் சூட்டினால் வரும் தலை வலி நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து, அதை நெற்றி பகுதியில் பற்று போல் போட்டால் தலைவலி நீங்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாகக் குறையும்.
சுரைக்காயை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். மதிய உணவுடன் சுரைக்காய் ஜுஸ் அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும்.
கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்த கட்டு கட்டினால் எரிச்சல் குறையும். இவ்வாறு உடலுக்கு பல்வேறு நற்பலன்களை தரக்கூடிய சுரக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.