Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பையில் உள்ள நீர்க்கட்டி பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறதா மலைவேம்பு...!!

Advertiesment
Malai vembu
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:19 IST)
பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலை வேம்புச்சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.


இதனால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

மலை வேம்பு சாறு: மலை வேம்பு இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒருடம்ளராக சுருக்கிக் குடிக்கவும்.

பயன்கள்: நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை. குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.

மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை. வேப்பிலையை விட சின்னதா இருக்கும் அதோட பூ கலர் வெள்ளை, மகரந்தம் பர்பிள் ஊதா கலரில் இருக்கும் வித்தியாசமாக கொத்து கொத்தாக இருக்கும்.

மலை வேம்பு இலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் சாறு பிழிந்து அல்லது வேப்பிலை எடுத்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி 3 உருண்டை சாப்பிடனும் மற்றும் நடைபயிற்சி 2 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம்.

ஜூஸ் குடிக்கும் மூன்று நாட்கள் மட்டும்தான் எண்ணெய், புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும். மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம். நீர்க்கட்டி இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்களும் பலன்களும் !!